கொரோனா வைரஸ்…. அரசாங்கம் எடுத்துள்ள திடீர் நடவடிக்கை!

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் on-arrival visa என்ற விமான நிலையத்தில் வழங்கப்படும் வீசா அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரு உத்தியாக அரசாங்கம் இதனை செய்வதாக அரச தகவல் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோன வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பல நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தினை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.